மட்டக்களப்பு மாவட்டத்தில் டிக்வா புயலினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுப்பு.










 கிழக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் இயற்கை அனத்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் பணிகள்  செயற்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது 

அதேவேளை மாவட்டத்தில் அண்மையில் பெய்த அடைமழை காரணமாக தாழ்நிலைப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியதனால் தற்போது அப்பகுதியில் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதனால் இனம் காணப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட  நாவற்குடா பொது சுகாதாரப் பிரிவில் இன்று காலை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி  இ உதயகுமார் தலைமையில் பாரிய டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது

 இந்த டெங்கு பரிசோதனையின் போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் வீட்டு சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்து இருக்காதவர்கள் மீது முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் டெங்கு குடும குடம்பிகள்  இனம் காணப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது

 இதன் போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி E. உதயகுமார் மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைந்து மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தினால் பராமரிப்பற்று காணப்படுகின்ற காணி உரிமை யாளர்கள் மீது அவற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்க அறிவுறுத்தப்படும் அதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த காணிகளை சுவிகரிக்கின்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்பட உள்ளதாக அவர் கருத்து தெரிவித்தார்

 இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான செயற்திட்ட அமைப்பாளர் இ. ராஜ்குமார் மற்றும் மாநகர சபை ஊழியர்கள் இலங்கை செஞ்சிலுவை  சங்கத்தின் உறுப்பினர்கள் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உறுப்பினர்கள் பொதுச் சுகாதார பரிசோதனைகள் என பலரும் இந்த விசேட டெங்கு பரிசோதனை செயற்திட்டத்தில் கலந்து கொண்டனர்.

 
வரதன்