மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கோலாகலமாக இடம்பெற்ற பொங்கல் விழா!!

 

 

 
 














 


 

District Secretariat Batticaloa news

 
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பொங்கல் விழாவானது பாரம்பரிய முறைப்படி மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மிகவும் கோலாகலமாக புதிய மாவட்ட செயலக வளாகத்தில் (31) திகதி இடம்பெற்றது.
மாவட்ட செயலகத்தின் மூஷிக விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பாரம்பரிய கலாசார முறைப்படி பூசைப் பொருட்கள், அறுவடை செய்த நெற் கதிர்கள், பாரம்பரிய விவசாய பொருட்கள் என்பன மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்டு, பாரம்பரிய முறைப்படி உப்பட்டி அடித்து பெறப்பட்ட நெல்லினை தூற்றி, அரிசி குற்றிபொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டனர்.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலக உத்தியோகத்தர்களினாலும் தனித்தனியாக 14 வகையான பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டதுடன், பொங்கல் பிரசாதம் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இதன் போது களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கலைஞர்களினால் கரகாட்ட நடனம், பட்டிபளை பிரதேச செயலக கலைஞர்களின் நாட்டார் பாடல் இசைத்தல், கன்னன்குடா கண்ணகி முத்தமிழ் மன்றத்தின் கண்கவர் கூத்து நிகழ்வும், காத்தான்குடி பிரதேச செயலக பிரின் கலைஞர்களின் புத்தாக்க பாடல், மற்றும் திறமைகளை வெளிக்காட்டியவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடனர்.
இந்நிகழ்வுகளில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதம கணக்காளர் திருமதி.ஆர்.காயத்திரி, பிரதம பொறியியலாளர் ரீ. சுமன், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு, உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள் உத்தி போதத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.