கல்குடா பாசிக்குடா முனை முருகன் ஆலயத்தில் தைப்பூசத் திருநாள் பூசை.




















தைப்பூசத் திருநாள்  உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள தமிழர்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். குறிப்பாக, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய  தலங்களில்  வெகு விமர்சையாக தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் கல்குடா பாசிக்குடா முனை முருகன் ஆலயத்தில் தைப்பூசத் திருநாள்  பூசை இடம்பெற்றது.

இதன்போது வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தினை முன்னிட்டு வேல் பாத யாத்திரை இடம்பெற்றது.

தைப்பூசத்தினை முன்னிட்டு ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த வேல் பாத யாத்திரை வாழைச்சேனை, கல்குடா, பாசிக்குடா பிரதான வீதி வழியாக பாசிக்குடா முனை முருகன் ஆலயத்தினை சென்றடைந்தது.

பாசிக்குடா முனை முருகன் ஆலயத்தில் தைப்பூசத்திற்கான பூசைகள் இடம்பெற்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நாளில் தைப்பூசத்தினை முன்னிட்டு இந்து ஆலயங்களில் புதிர் வழங்கும் வைபவமானது  சுபவேளையிலிருந்து ஆரம்பமாகி பக்தர்களுக்கு  புதிர் வழங்கப்பட்டது.

அந்த வகையில் பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தின்   நெற்கதிர்  எடுத்து வரப்பட்டு  ஆலயத்தில்  பக்தர்களுக்கு  புதிர் வழங்கப்பட்டது.

 

 

  ந.குகதர்சன்