
( பூண்டுலோயாவிலிருந்து சகா)
உலகளாவிய
ராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மற்றும்
உலகின் முதல் தமிழ் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த
அடிகளார் ஆகியோரது திருவுருவச்சிலைகள் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள்
ஒன்றியத்தின் (ஒஸ்கார் – AusKar) ஏற்பாட்டில் பூண்டுலோயாவில் மங்கள
பேரிகைகள் முழங்க நேற்று( 07 ) சனிக்கிழமை
பூண்டுலோயாவில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
பாண்ட் வாத்தியம் நாதஸ்வர மேளம் ஒஸ்காரின் மங்கள இசை முழங்க, பரதம் கும்மி கோலாட்டம் சகிதம்
மலையக மண்ணில் இடம்பெற்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விழா இது.
இச்
சிலைகள் மத்திய மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச
செயலாளர் பிரிவிலே பூண்டுலோயா விவேகானந்த மகாவித்தியாலயத்தில்நேற்று அதிபர்
ஆறுமுகம் ரவீந்திரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இராமகிருஷ்ண
மிஷனின் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ்
மற்றும் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா
ஜீ மஹராஜ் ஆகியோர் சிலைகளை திறந்து வைத்தனர்.
ஒஸ்கார்
சார்பில் தாயக இணைப்பாளர் ஓய்வு நிலை உதவி கல்விப் பணிப்பாளர் வித்தகர்
விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா நட்சத்திர அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மேலும் பல அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
முன்னதாக அதிதிகளுக்கு பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மண்டபத்தில் மைடை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஒஸ்காரின் துறவியர் படிவமலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலாசிரியர் வி.ரி.சகாதேவராஜா முதற் பிரதிகளை சுவாமிகளுக்கு வழங்கி வைத்தார்.
சுவாமிகள் மற்றும் இணைப்பாளர் சகா ஆகியோருக்கு பாடசாலை சமூகம் பொன்னாடை போர்த்தி கௌரவித்தது.
ஒஸ்கார் சார்பில் இணைப்பாளர் சகா, அதிபர் ரவீந்திரனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
ஒஸ்காரின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் நிதி அனுசரணையில் மக்களுக்கும் ஆசிரியைகளுக்கும் புது வஸ்திரங்கள் வழங்கப்பட்டன.
இறுதியில் ஒஸ்காரின் ஏற்பாட்டில் அன்னதானம் இடம் பெற்றது.
பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

.jpg)





.jpg)



.jpg)











.jpg)




