மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பில் முதன் முறையாக பிரபல இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்ற “தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” எனும் இசை நிகழ்ச்சி மட்டக்களப்பு கல்லடியில் மிகப்பிரமாண்டமாக இடம்பெற்றது.
இலங்கை பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பிரதான இணைப்பாளர் சகோதரர் வீ.கே.சுரேந்திரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் தென்னிந்திய பிரபல பாடகர் பீ. உன்னிகிருஷ்ணன் அவர்களும் அவரது மகள் செல்வி உத்தரா உன்னிகிருஷ்ணன் மற்றும் பாடகரும் நடிகருமாகிய பிலக் பாண்டியும் பங்கேற்று குறித்த பக்தி இசை நிகழ்ச்சியை அலங்கரித்தனர்.
குறித்த நிகழ்விற்கு ஆன்மீக பேச்சாளராக இந்தியா – திருவண்ணாம்பி.கு.உமாலையில் இருந்து தெய்வீக சகோதரி கலந்துகொண்டு ஆன்மீக உரை நிகழ்த்தினார்.
அத்தோடு கல்லடி கடற்கரையில் 12 ஜோதிலிங்க தரிசன கண்காட்சியும் இதன்போது இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் வைத்தியர் இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.




.jpeg)










