மட்டக்களப்பு வேலூர் கல்லடியில் பல்லாண்டு காலமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று ஞாயிற்று கிழமை 2026.02.01 காலை 07.45-மணி முதல் 8.57.வரையான சுப முகூர்த்த வேளையில் இடம் பெற உள்ளது .
கடந்த 28 ஆம் திகதி புதன் கிழமை காலை 6.22 மணிக்கு கிரியாரம்பத்துடன், விசேட பூஜைகளும் வழிபாடுகளும் இடம்பெற்றன .
நேற்றைய தினம் ஜனவரி மாதம் 31ம் திகதி சனிக்கிழமை காலை 4.30 மணி தொடக்கம் மாலை 7.00-மணி வரை அம்மனுக்கு பக்தர்களால் எண்ணைக்காப்பு சாத்தும் கிரியை பக்தி சிரத்தையுடன் இடம் பெற்றது
கும்பாபிஷேக நிகழ்வுகளைத் தொடர்ந்து 24 நாட்கள் மண்டலாபிஷேகம் நடை பெற உள்ளது .
கும்பாபிஷேக பிரதம குரு கிரியாகலாநிதி தேவ ஞான சிரோன்மணி அகோர சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ கணேஷ லோகநாத குருக்கள் தலைமையில் கும்பாபிஷேக நிகழ்வுகள் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது .
கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டு அம்மனின் பேரருளை பெற்றேகுமாறு ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் அன்புடன் அழைக்கின்றனர் .




















































