.
மட்டக்களப்பு, வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட பெருவெளி மற்றும் குளத்துவட்டை ஆகிய இரு கமநல அமைப்புகளின் கீழ் உள்ள விவசாய நிலங்களில் நெற்பயிர் அறுவடையை தீர்மானம் செய்யும் விசேட கலந்துரையாடல் கூட்டம் இன்று பெருவெளி, குளத்துவட்டை கண்டங்களின் கமநல அமைப்புக்களின் நிர்வாகிகளின் தலைமையில் வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் எதிர்கால நடவடிக்கை மற்றும் அறுவடை திகதி குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அதன் அடிப்படையில் பெருவெளி மற்றும் குளத்துவட்டை ஆகிய இரு கண்டங்களினதும் அறுவடைப் பணிகள் எதிர்வரும் 13.02.2026 முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என தீர்மானம் எட்டப்பட்டது.
இக் கலந்துரையாடலில் இரு கண்டங்களையும் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்தனர்.
அறுவடைப் பணிகளை எவ்வித தடையுமின்றி சுமூகமாக முன்னெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைக் குறித்த கமநல அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







