நுவரெலியா கிரகரி வாவியில் " SEAPLANE " ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.

 








நுவரெலியா, கிரகரி வாவியில் தரையிறங்க முயன்ற நீரில் இறங்கும் திறன் கொண்ட வானூர்தி (Seaplane) ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தரையிறங்கும் போது வீசிய பலத்த காற்று காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது விமானத்தில் 2 விமானிகள் (Pilots) மாத்திரமே இருந்துள்ளனர்.

காயமடைந்த இரண்டு விமானிகளும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.