இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் Inspire Institute of Sports சர்வதேச ரீதியான United World Wrestling மல்யுத்த பயிற்சி முகாமில் பங்கு பற்ற மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் சஞ்சீவ் டிருஷாந் மற்றும் கருவப்பங்காணி விபுலானந்தா கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் வேலு திருச்செல்வம் இலங்கை அணியின் பயிற்சிவிப்பாளராக இன்று பயணமாக உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார் .இதன் போது மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஜெயக்குமார் உடனிருந்தார் . அதனைத்தொடர்ந்து
மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளரின் பணிமனையில் வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி அவர்கள் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார் ,இதன் போது பிரதி வலயகல்விப்பணிப்பாளர்கள் ,கோட்ட கல்வி பணிப்பாளர்கள் உடற்கல்வி பணிப்பாளர் ஆகியோரும் அவர்களும் உடனிருந்தனர்.
இம்மாதம் 20ஆம் தேதி இருந்து பிப்ரவரி மாதம் 2-ம் திகதிவரை நடத்தப்படுகின்ற மல்யுத்த பயிற்சி முகாமுக்கு இலங்கையிலிருந்து ஏழு வீரர்களும் இரு பயிற்றுவிப்பாளர்களும் பங்கு பற்ற உள்ளனர் .இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் சஞ்சீவ் டிருஷாந் பங்கு பற்ற உள்ள நிலையில் கருவப்பங்காணி விபுலானந்தா கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் வேலு திருச்செல்வம் இலங்கை அணியின் பயிற்சிவிப்பாளராக செல்ல உள்ளார்.














