மட்டக்களப்பபு மாவட்ட வாழைச்சேனை ஜப்பான் Japan karate shotokan Study Association மாணவர்கள் இலங்கை சர்வதேச தரப்படுத்தல் பயிற்சி முகாமில் பங்கு பற்றினர்.

 





 

United Alliance Of Shoto Karatedo கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில்  தம்புள்ள  ரன்கிரி தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கான இலங்கை சர்வதேச தரப்படுத்தல்  பயிற்சி முகாம்  இடம்பெற்றது.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

மட்டக்களப்பபு மாவட்டத்தில் வாழைச்சேனை ஜப்பான் J.K.S.S.A (Japan karate shotokan Study Association) மாணவர்களும் பங்கு பற்றியிருந்தனர்.

இப்பயிற்சியினை அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த சர்வதேச  பயிற்றுவிப்பாளர் Abu  Sufian Haider, Sensei (UASK)  கலந்து கொண்டு பயிற்சி வழங்கியிருந்தார்.

இதன்போது பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் JKSSA கழகத்தின் பிரதான பயிற்றுவிப்பாளரான சிஹான் H.M. விஜயகுமார அவர்களும் பயிற்றுவிப்பாளர்களான சென் செய் T.சதானந்தகுமார் சென்செய் M.நாகராஜா சென் செய்  S.சகாயராஜா சென்செய் AR. நவாஸ் ஆகியோரும் மட்டக்களப்பு சார்பாக பங்கேற்றனர்.

ந.குகதர்சன்