மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தம் .

 


மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தம் இன்றைய தினம் களுதாவளை கடலில் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் 10 நாட்கள் திருவெம்பவை பூஜைகள் இடம்பெற்றது. 

இதைதொடர்ந்து இன்றைய தினம் சனிக்கிழமை(3) பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று, சுவாமி உள்வீதி வெளிவீதி உலவும் இடம்பெற்றது.

மேலும் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் மயில் வானகத்திலும், பிள்ளையார் மூசுக வாகனத்திலும், சிவபெருமான் உடன் உமாதேவியும் இடப வாகனத்திலும் கிராமத்தின் உள்வீதியாக வலம் வந்தனர்.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ அரோகரா கோசங்கள் முழங்க சுவாமி களுதாவளைக் கடலில் திருவாதிரை தீர்த்தம் இன்றைய  பூரணை தினத்தில்  இடம்பெற்றது.  

ஆலய கிரியைகள் யாவும் ஆலய பிரதமகுரு கு.சிறிஸ்கந்தராஜா குருக்கள் தலைமையில் நடைபெற்றன.