நாட்டிற்குள் சட்டவிரோதமாக சுமார் ஆறு கோடி பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற இலங்கை தனியார் நிறுவன விமான பணிப்பெண் கைது.

 


நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஐந்து கோடியே தொண்ணூறு லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கடத்த முயன்ற இலங்கை தனியார் நிறுவன விமான பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (04) சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்டவர் கொழும்பை சேர்ந்த 27 வயது விமானப் பணிப்பெண் என தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து விமானக் குழுவினருக்கான வெளியேறும் வாயில் வழியாக வெளியேற முயன்றபோது, ​​அவரின் பயணப்பொதியில் குறித்த தங்க ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.