ஒன்றரை மாத குழந்தையை இந்திய மதிப்பில்
380,000 ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சென்னை காசிமேட்டைச்
சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
குறித்த தம்பதிக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இன்னொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து தண்டையார்ப்பேட்டையைச்
சேர்ந்தவர் மூலம், அந்த குழந்தையை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த
குழந்தையில்லா தம்பதிக்கு கடந்த 19 ஆம் திகதி விற்றுவிட்டதாக, காசிமேடு
காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.





