மட்டக்களப்பு திராய்மடு ஸ்ரீ கிருஷ்ணா விளையாட்டு கழகத்தினால் ஸ்ரீ வீரபத்தினியம்மன் ஆலயத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது .

 

 




















































































மட்டக்களப்பு திராய்மடு  ஸ்ரீ கிருஷ்ணா விளையாட்டு கழகத்தினால் வருடாவருடம் திராய்மடு ஸ்ரீ வீரபத்தினியம்மன்  ஆலயத்தில் புது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக பூசைகள் நடத்தி வருகின்றது. 
இதனை மேலும் மெருகூட்டும் வகையில் அழியாச் செல்வமான கல்வியின் மகத்துவத்தை மேம்படுத்தும் நோக்கத்தினை கருத்திற் கொண்டு, அன்றைய தினம் ஆலயத்திற்கு வருகை தருகின்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் இன, மத, பேதமின்றி கற்றல் உபகரணங்களை வழங்கி வருகின்றது. 

இவ் வருடமும் (01.01.2026) அன்று  ஸ்ரீ கிருஷ்ணா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில்      வழிபாட்டுக்காக வருகை தந்த அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் கல்வி மேம்பாட்டுக்காக     கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது .