இலங்கை சுங்கத்துறையின் வருவாய் இலக்கு நடப்பாண்டில் 2,206 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், இலங்கை சுங்க ஊடக பேச்சாளர் சந்தன் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதியில் இருந்து
எதிர்பார்க்கப்படும் வருவாய் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு இந்த தொகை
நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டை விட வாகன இறக்குமதி குறையும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை சுங்க ஊடக பேச்சாளர் சந்தன் புஞ்சிஹேவர் குறிப்பிட்டுள்ளார்.





