மீட்கப்படும் சோழர் காலப் பொக்கிஷங்கள்-

 


அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகம் இந்தியாவில் இருந்து களவாடப்பட்ட மூன்று வெண்கலச் சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது. 
 
இந்தச் சிலைகள் இந்திய ஆலயங்களில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டவை என்பது விரிவான ஆய்வுகளுக்குப் பின்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இந்தியாவிடம் கையளிக்கப்படவுள்ள சிலைகளில் நடராஜர் சிலை ஒன்று சோழர் காலத்தில், கிறிஸ்துவிற்கு பின்னர் 990 ஆம் ஆண்டை சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேபோன்று சோமஸ்கந்தர் சிலை சோழர் காலம், 12ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தவிர, மூன்றாவது சிலை சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் பரவை நாச்சியார் சிலை என்பன விஜயநகர காலத்தை சேர்ந்தது என்பதுடன் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர்.