.jpeg)
கோறளைப்பற்று மேற்கு, பிரதேச சபை, பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாலைத்தை அண்டிக்காணப்படும் அரிசி ஆலை உரிமையாளர் எச்.எம்.பாறுக் ஹாஜியாரின் தென்னந்தோட்டத்திற்கு நேற்றிரவு (06) புகுந்த காட்டு யானைக்கூட்டம் அங்கிருந்த காய்க்கும் தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ள வேலிகளையும் சேதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் காய்க்கும் எட்டுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி ஆற்றின் நடுப்பகுதியில் குடிகொண்டுள்ள சுமார் ஆறுக்கும் அதிகமான காட்டு யானைகள் இரவு வேளையில் இவ்வாறு அயலிலுள்ள ஓட்டமாவடி, காவத்தமுனை கிராமங்களுக்குள் புகுந்து பெறுமதியான சொத்துக்கள், காய்க்கும் தென்னை மரங்களுக்கும் சேதம் உண்டு பண்ணுவதுடன், மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.
குறித்த யானைக்கூட்டத்தை துரத்தியடிக்கும் பணி அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டாலும் மீண்டும் மீண்டும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நிலவி வருகின்றது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான நிரந்தரத்தீர்வினை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ந.குகதர்சன்


.jpeg)


.jpeg)

.jpeg)






