அரசின் அனர்த்த நிவாரணம் அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு சீராக வழங்கப்பட வேண்டும்! கோடீஸ்வரன் எம்.பி வலியுறுத்து

 




இயற்கை அனர்த்தங்கள் ஜாதி மத பேதம் பார்த்து நிகழ்வதில்லை .அந்த அடிப்படையில் அண்மையிலே ஏற்பட்ட ரித்வா பேரிடரினால் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களுக்கு அரச நிவாரணம் சீராக சென்றடையவில்லை என்று பல முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. எனவே சம்பந்தப்பட்டவர்கள் அதில் கவனம் எடுக்க வேண்டும்.

என்று இலங்கை தமிழரசுக்கட்சி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி. கோடீஸ்வரன் நேற்று தெரிவித்தார் .


அவர் மேலும் தெரிவிக்கையில் .

 அம்பாறை மாவட்டத்தில் 
குறித்த பேரிடருக்கு அடுத்த காலப்பகுதியில் மின்சார மின்மையால் உரிய அதிகாரிகள் முறையாக பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை உரிய வேளையில் சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
 எனவே அரசாங்க அதிபர் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் இந்த பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ப நிவாரணம் வழங்கப்படுவதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


( வி.ரி.சகாதேவராஜா)