திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் சிறியளவிலான நிலநடுக்கம்.

 


திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

 குறித்த நில நடுக்கம் இன்று பிற்பகல் 3.49 மணியளவில்  ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் கடலோரப் பகுதியில் ஏற்பட்டதாகவும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அந்த பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது கடற்பகுதியில் ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் கரையோர மக்களுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.