வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் திருகோணமலையின் வடக்கு - வடகிழக்குத் திசையில் சுமார் 100 km தொலைவில் இன்று காலை 4.00 மணியளவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் நிலைகொண்டிருந்தது. இது இன்று சுமார் 5.30 மணியளவில் நலிவடைந்து தாழ் அமுக்கமாக மாறுவதுடன் வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும். இன்று நன்பகல் அளவில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையாக இலங்கை கரையை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் வட அரைப் பகுதியில் வானம் முகில் செறிந்து காணப்படும்.
வட மாகாணத்திலும் அத்துடன் புத்தளம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .
வட மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 50 - 60 km வேகத்தில் அடிக்கடி மிகப் பலத்த காற்று வீசக் கூடும். சில வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 km ஆக அதிகரித்தும் காணப்படும். வடமேல் மாகாணத்திலும் அத்துடன் மாத்தளை, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.





