.jpeg)
ஈழத் தமிழ் கலைஞர் ஒன்றிய மட்டக்களப்பு பிராந்தியமும், கதிரவன்
பட்டிமன்றப் பேரவையும் இணைந்து நடத்திய பொங்கல் விழாவும் சிறப்பு
பட்டிமன்றமும் 29.01.2026 (வியாழக்கிழமை) மட்/ கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண
மிஷன் வித்யாலயத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
வித்தியாலய
அதிபர் தலைமையில், தமிழ் பாட ஆசிரியர் திரு சி.சுதேஸ்வரன் அவர்களின்
ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு ஈழத் தமிழ் கலைஞர் ஒன்றிய
மட்டக்களப்பு பிராந்தியத் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன்,
எழுத்தாளர் மற்றும் கதிரவன் ஆலோசகர் தாந்தியன் சிதம்பரப் பிள்ளை,
பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய
மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் பங்குபற்றி இருந்தனர்.
பொங்கல்
விழா சிறப்பு பட்டிமன்றமாக கதிரவன் பட்டிமன்றப் பேரவைத் தலைவர் கதிரவன் த.
இன்பராசா தலைமையில் கதிரவனின் 165 ஆவது பட்டிமன்றம் அரங்கேறியது.
மாணவர்களின்
முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்களிப்பு போதும் போதாது எனும் தலைப்பில்
அமைந்த பட்டிமன்றத்தில் போதும் என்ற அணியில் கவிஞர் அழகு தனு, பாலமீன்மடு
இரா கலைவேந்தன் ஆகியோரும் போதாது என்ற அணியில் புதுவையூர் பு. தியாகதாஸ்,
சோலையூரான் ஆ. தனுஷ்கரன் ஆகியோரும் பங்கு பற்றினர்.
பட்டிமன்றத்தினைத்
தொடர்ந்து விருந்தினர்கள் வாழ்த்துரையும், பார்வையாளர்களின்
பின்னூட்டல்களும் இடம் பெற்றதோடு பட்டிமன்றப் பேச்சாளர்கள் பாடசாலை
சமூகத்தினரால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.


.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)




.jpeg)

.jpeg)




