Apple நிறுவனம் தனது உற்பத்தி வியூகத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டு வருவதாக நிக்கி ஆசியா (Nikkei Asia) செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி Apple தனது வரலாற்றிலேயே முதல்முறையாக மடிக்கக்கூடிய வசதி கொண்ட ஐபோனை 2026இல் அறிமுகம் செய்யவுள்ளது.
2026இன் பிற்பகுதியில், மடிக்கக்கூடிய
ஐபோனுடன் சேர்த்து, மேம்படுத்தப்பட்ட கெமரா மற்றும் பெரிய திரைகளைக் கொண்ட
மேலும் 2 உயர்தர (High-end) மொடல்களை வெளியிட Apple திட்டமிட்டுள்ளது.
வழக்கமாக வெளியாகும் சாதாரண மொடலான
ஐபோன் 18 (Standard iPhone 18) இன் அறிமுகம் 2027ஆம் ஆண்டின் முற்பகுதி வரை
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மெமரி சிப்கள் மற்றும் பிற
மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், அதிக இலாபம் தரும் உயர்தர
மொடல்களில் Apple கவனம் செலுத்துகின்றது.
மடிக்கக்கூடிய சாதனங்களைத் தயாரிப்பதில்
உள்ள சிக்கலான தொழில்நுட்ப சவால்களைச் சமாளிக்கவும், உற்பத்தி அபாயங்களைக்
குறைக்கவும் இந்த அவகாசம் தேவைப்படுகின்றது.





