போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு குழுவினரை பணிநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஹலகம காவல்துறை கல்லூரியில் பயிற்சி
பெறும் காவல்துறை அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்ட போதே
அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்





