ஊழியர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் கொடுப்பனவுக்காக மின்கட்டண உயர்தப்படுமா ?

 


2026 ஜனவரி முதல் மார்ச் வரை மின்சார கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், மின்சார சபையில் இருந்து, தன்னார்வமாக முன்கூட்டியே வெளியேறத் தேர்ந்தெடுக்கும் பணியாளர்களுக்கு கொடுப்பனவுகளை தீர்க்க முடியும் என, முன்மொழியப்பட்டுள்ளது 
 
இதன் அடிப்படையில், 11.554 பில்லியன் ரூபாய்களை, குறித்த பணியாளர்களுக்கு வழங்க முடியும் என்று இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஒழுங்குமுறை ஆணையகத்திற்கு முன்மொழிந்துள்ளது. 
 
இந்த கொடுப்பனவுகள் 2,158 பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 
 
இதில் சில பணியாளர்கள் 50 இலட்சம் ரூபாய் வரையில் பெற்றுக் கொள்வர் என்றும் மின்சார சபை கூறியுள்ளது.