பொங்கலன்று கடலில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

 


மன்னார் - பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காகச் சென்றுள்ளனர். 

 நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன்,மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 இதேவேளை ஒருவர் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

காணாமல் போனவரை தேடு பணி இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.