மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையின் 39 ஆவது ஆண்டு நினைவுதினம்.

 

 









 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையின் 39 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று புதன்கிழமை 28.01.2026 முதலைக்குடா அருள்மிகு ஸ்ரீ பாலயடி விநாயகர் மற்றும் கண்ணகையம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட உறவுகள் நினைவு கூரப்பட்டனர்.

இந்நினைவு கூரலில் மதத்தலைவர்கள், குடும்ப உறவுகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இப்படுகொலை 1987 ஆம் ஆண்டு ஜனவரி  மாதம் 28 ஆம் திகதி நடைபெற்றிருந்தது. இதன்போது பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், பண்ணையில் தொழில்புரிந்தோர்,அரச ஊழியர்கள் எனப் பலதரப்பட்டோர் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.