மட்டக்களப்பு கல்லடி உப்போடை ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் சாரதா பாலர் பாடசாலை
நடத்திய உயர்வை நோக்கிச் செல்லும் விழா விபுலானந்தர் ஞாபகார்த்த
மணிமண்டபத்தில் இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாணவர்களினால்
மலர்மாலை அணிவிக்கப்பட்டு பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு மண்டபத்திற்கு
அழைத்து வரப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் தமிழ்மொழி
வாழ்த்து பாடப்பட்டு வரவேற்பு நடனத்துடன் பாலர்பாடசாலை நிகழ்வுகள்
வெகுசிறப்பாக ஆரம்பமானது .
இந்நிகழ்வுக்கு ஆன்மீக அதிதிகளாக
மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி
நீலமாதவானந்தஜீ மகராஜ் கலந்து சிறப்பித்தார்.
பிரதம அதிதியாக
மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் நாகராஜா தனஞ்ஜெயன் பங்கேற்றத்துடன் கௌரவ
அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணியக முன்பிள்ளைப்பருவ
அபிவிருத்தி உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன்
மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிரேஷ்ட விரிவுரையாளர் ,குழந்தை நல
விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் விஷ்ணு சிவபாதம் ஆகியோரும் கலந்து
கொண்டனர் .
சிறப்பு அதிதியாக ராஜதுரை முருகதாஸ் மற்றும் சிவாநந்தியன் கலந்து கொண்டனர் .
.
இதன்போது
2026 ஆம் ஆண்டு தரம் -01 இற்கு பாடசாலைகளில் இணையவுள்ள சிறார்களுக்கு
பட்டமளித்துச் சான்றிதழ் வழங்கி பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு
கௌரவிக்கப்பட்டனர்
சிறார்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு பொதுமக்கள் , ஆசிரியர்கள் நலம் பிரும்பிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
EDITER




































































































