மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் இவ் வருடத்திற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் (பதிற்கடமை) அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29.01.2026 முற்பகல் 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கெளரவ கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான
ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத் மற்றும் கலாநிதி எம்.எல்.எ.எம் ஹிஸ்புள்ளா ஆகியோருடன் மண்முனைப்பற்று பிரதேசசபை கௌரவ தவிசாளர் காத்தலிங்கம் செந்தில்குமார் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உதவி பிரதேச செயலாளர் திரு கி.இளம்குமுதன், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் அரச திணைக்களங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்
குறித்த கலந்துரையாடலில் 2025ம் ஆண்டில் நடைபெற்று முடிவடைந்த திட்டங்கள் மற்றும் 2026ம் ஆண்டுக்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் கடந்த வருடம் ஏற்பட்ட Dithwa புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்படும் கொடுப்பனவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
பிரதேசத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் தேவைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு உரித்துடைய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் என்றவகையில் எதிர்கால நடவடிக்கைகள் தற்போதுள்ள பிரச்சனைக்கான தீர்வுகள் கோரிக்கைகளுக்கு முடிந்தவரை தீர்மானங்கள் எடுத்துரைக்கப்பட்டதனைத் தொடர்ந்து இக்கூட்டமானது இனிதே நிறைவு பெற்றது.












.jpeg)












.jpeg)



















