மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்தில் 2026ம் ஆண்டின் கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

































பொதுமக்களுக்கு  சேவை வழங்குவதன் வினைத்திறனினை உறுதிப்படுத்தும் ஒருமைப்பாடுடனான அரச சேவைக்காக, ஒட்டுமொத்த அரச சேவையும் அதற்காக திடசங்கட்பத்துடன்  அர்ப்பணிக்க வேண்டியதனை நோக்காக கொண்டு 2026ம் ஆண்டின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (2026.01.01) மு.ப 8.30 மணியளவில்  பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் அவர்களினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, அலுவலக உத்தியோகத்தர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், மும்மத அனுஷ்டானங்கள் இடம்பெற்று நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த  அனைவரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரதேச செயலாளர் அவர்களினால் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள  அரச கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் பற்றியும், அந்த குறிக்கொள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் தொடர்பாகவும் உரை நிகழ்த்தப்பட்டதுடன் , ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்களால் புதுவருட விசேட உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

கடந்த வருடம் தங்கள் கடமை செயற்பாடுகளில் சிறப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்கள், தங்களது கடமைகளுக்கு அப்பால் சேவையாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் கடந்த அனர்த்த நிலைமைகளில் சிறப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்களும் இதன்போது கெளரவிக்கப்பட்டதுடன், 2025ம் ஆண்டுக்கான சிறந்த உத்தியோகத்தராக முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி பத்மினி நிமலராசன் அவர்கள் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முகமாக பிரதேச செயலக பழந்தோட்ட பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.