2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், இலங்கையில் கணினி எழுத்தறிவு விகிதம் 38.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நகர்ப்புறங்களில் 52.1
சதவீதமும், கிராமங்களில் 36.6 சதவீதமும், பெருந்தோட்டப் புறங்களில் 18.6
சதவீதமும், கணினி எழுத்தறிவு வீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 2025ஆம் ஆண்டின் முதல்
அரையாண்டில் கணினி எழுத்தறிவானது ஆண்களிடையே 39.9 சதவீதமாகவும்,
பெண்களிடையே 37.1 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட
இளைஞர்கள் அனைவரும் 75.6 சதவீத கணினி எழுத்தறிவுடன் காணப்படுவதாக தொகை
மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களிடையே கணினி எழுத்தறிவு அதிகமாகக் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரையில், 5 முதல் 69 வயதுக்கு இடைப்பட்டவர்கள் தாமாகவே கணினியைப் பயன்படுத்தக் கூடியவர்களாக அறியப்பட்டுள்ளனர்.





