காங்கோ ஜனநாயகக் குடியரசில் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .

 


மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள, காங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்குப் பகுதியில் ருபாயா (Rubaya) கொல்டன் (coltan) சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
கோமா (Goma) நகரிலிருந்து வடமேற்கே சுமார் 60 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்தச் சுரங்கம் கடந்த புதன்கிழமை(28) சரிந்தது.
 
வெள்ளிக்கிழமை(30) மாலை வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை துல்லியமான தெளிவாகத் தெரியவில்லை என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலச்சரிவில் சுரங்கத் தொழிலாளர்கள், குழந்தைகள் மற்றும் சந்தைப் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
காயமடைந்த 20 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பல எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.