"சுதந்திரத்தை அளிக்கத் தெரியாதவர்களுக்கு சுதந்திரத்தை பெறுவதற்கு தகுதியில்லை " சுவாமி விவேகானந்தரின் 164வது ஜெயந்தி விழாவில் சுவாமி நீலமாதவானந்தா ஜீ

 














சுதந்திரத்தை அளிக்கத் தெரியாதவர்களுக்கு சுதந்திரத்தை பெறுவதற்கு தகுதியில்லை என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார் . எனவே நாம் யாருக்கும் அடிமை இல்லை. கோழை களுக்கு  இங்கு இடமில்லை. தன்னம்பிக்கையுடன் சேவை செய்ய வேண்டும்.

இவ்வாறு வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 164 வது  ஜெயந்தி விழாவில் பேசிய மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத்  சுவாமி  நீலமாதவானந்தா ஜீ மஹராஜ்  உரையாற்றினார் .

"தியாகத்தால் அன்றி பிறவா நிலையை அடைய முடியாது" என்றும் கூறினார்.

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத்தில், இந்தியத் துறவி, தத்துவஞானி மற்றும் தேசிய சிந்தனையாளர் சுவாமி விவேகானந்தரின் 164வது ஜெயந்தி விழா ஆன்மீக பக்தியுடனும் சிறப்புடனும் நேற்று  (10) சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.


விழா நிகழ்வுகள் காலை வேளையில் பிரார்த்தனை ஊர்வலம் மற்றும் பூஜைச் செயல்பாடுகளுடன் ஆரம்பமானது. தொடர்ந்து, சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை, தியாகம், இளைய தலைமுறைக்கான அவரது கல்வி-சிந்தனைகள் குறித்து விளக்க உரைகள் இடம்பெற்றன.

அங்கு அவர்  மேலும் தெரிவிக்கையில்..

இங்கு கோழைகளுக்கு இடமில்லை என்கிறார் சுவாமி விவேகானந்தர் . நீ இருக்கிறதை விட  நடுக்கடலில் கரைந்து விடு என்கிறார் சுவாமி விபுலானந்தர் .

அந்த அடிப்படையிலே பார்க்கும் போது நாம் தன்னம்பிக்கையுடன் தைரியத்துடன் வாழ வேண்டும். நாம் யமனுக்குக் கூட அஞ்ச தேவையில்லை. நாமார்க்கும் குடியல்லோம் என்கிறார் அப்பர் சுவாமிகள்.
நாம் இறைவனின் குழந்தைகள்.
தன்னம்பிக்கையுடைய இளைஞர்களை உருவாக்க வேண்டும். நாம் யாருக்கும் அடிமை அல்ல .பலரது தியாகங்களால் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. தாய் தகப்பனின் தியாகத்தால் நாம் மனிதராய் இருக்கின்றோம். சுவாமி விவேகானந்தர் கூறியது போல பிறருக்கு உதவி செய்ய இந்த பிறவியைப் பெற்றிருக்கின்றோம். எனவே நாங்கள் முடிந்த அளவு நாங்கள் உதவி செய்ய வேண்டும் என்றார்.

 விழாவின் இறுதியில் சாந்தி பிரார்த்தனையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
 
 
 
( வி.ரி. சகாதேவராஜா)