தந்தை ஒருவர் 14 மகனை அடித்து கொன்றுள்ளார் .

 


கேகாலை நூரியா பொலிஸ் பிரிவின் நூரியவத்த 02 பிரிவில் 14 வயது சிறுவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று இரவு நூரியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அதற்கமைய, உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், வீட்டின் அருகே சிறுவன் கிடப்பதை அவதானித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சிறுவன்

சிறுவன் உடனடியாக நூரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய, இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்பதால், பிரேத பரிசோதனைக்காக உடல் அவிசாவலை வைத்தியசாலையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலை சந்தேகத்தின் பேரில் சிறுவனின் தந்தை நூரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.