சென்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிகேட் கடேட்டுகளுக்கான உளவியல் முதலுதவி (Psychological First Aid – PFA) பயிற்சி, மாவட்டத்தில் முதல் தடவையாக இன்று 30.12.2025 (செவ்வாய்கிழமை) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை நடாத்தினார்.
மேலும் டாக்டர் எஸ். டான் அவர்கள் நிகழ்ச்சிக்கான இணைப்பாளராகவும் வளவாளராகவும் கலந்து கொண்டு பயிற்சியை வழங்கினார்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
அத்துடன் சென்ட் ஜான் ஆம்புலன்ஸ் படையணியின் அத்தியட்சகரும் ஆசிரியருமான திரு. இ. வரதராஜன் அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இவ்வாரம்ப நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ் உளவியல் முதலுதவி பயிற்சியில், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் சென்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிகேட் சேவையின் கடேட்களான,
தரம் 7 முதல் G.C.E. உயர்தரம் வரை கல்வி கற்கும் சுமார் 80 மாணவர்கள் பயிற்சியாளர்களாக கலந்து கொண்டனர்.
பயிற்சியின் நோக்கங்கள்
இப் பயிற்சியின் அடிப்படை நோக்கமாக,
அவசரநிலைகள், பேரழிவுகள், விபத்துகள் மற்றும் நெருக்கடி சூழ்நிலைகளின் போது உடனடி, மனிதாபிமான மற்றும் ஆதரவான உளவியல் சமூக உதவிகளை வழங்கும் திறனை வலுப்படுத்துதல்
பாடசாலை வயதுடைய மாணவர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் வயதுக்கு ஏற்ற, சான்றுகள் சார்ந்த உளவியல் முதலுதவி திறன்களை வழங்குதல்
குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களில் மன அழுத்த எதிர்வினைகளை அடையாளம் காணுதல்
அமைதியான, ஆதரவான மற்றும் உறுதியளிக்கும் தகவல் தொடர்புகளை வழங்குதல்
பீதி, பயம், துக்கம் மற்றும் அதிர்ச்சிகளை நிர்வகிக்கும் வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல்
பரிந்துரை பாதைகள் மற்றும் சமூக ஆதரவு அமைப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு
தன்னார்வலர்களுக்கான சுய பராமரிப்பு மற்றும் சக ஆதரவை மேம்படுத்துதல்
என்பன முக்கிய அம்சங்களாக அமைந்திருந்தன.
சமூகத்திற்கு பயன் தரும் முயற்சி
இத்திட்டமானது சமூக அடிப்படையிலான உளவியல் சமூக ஆதரவு மற்றும் அவசரகாலத் தயார்நிலையில் இளைஞர்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் முயற்சியாக அமைந்தது.
மேலும், நெருக்கடி சூழ்நிலைகளில் மீள்தன்மை, இரக்கம் மற்றும் உளவியல் நல்வாழ்வை ஊக்குவிப்பதில் பயிற்சி பெற்ற கடேட்கள் (மாணவர்கள்) வகிக்கும் பங்கு மேலும் வலுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

.jpeg)


.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)





