சைவா அமைப்பின் ஒருங்கிணைப்பில் திரு.தாமோதரம் பிரதீவன் அவர்களின்
"அம்பாறை தமிழர் வரலாற்றுச் சுவடுகள்" எனும் வரலாற்று ஆய்வு நூல்
வெளியீட்டு நிகழ்வு 28.12.2025 இன்று பிற்பகல் கல்முனை கிறிஸ்த இல்லத்தில்
இடம் பெற்றது.
முதலில் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், தமிழ்த்தாய்
வாழ்த்து, வரவேற்பு நடனம், ஆசியுரை, வரவேற்புரை, நூல் வெளியீடு தமிழ்நாடு
வரலாற்று ஆய்வாளர் திரு.வேல்கடம்பன் அவர்களால் இடம்பெற்றதுடன் தொடர்ந்து
நூலாசிரியர் பற்றியும் நூலைப் பற்றியும் ஊடகவியலாளர் திரு.கு.கிலேசன் உரை
நிகழ்த்தியதுடன், ஏற்புரை, நூல் வழங்கும் நிகழ்வு விருந்தினர்கள் உரை,
மதிப்பளித்தல் நிகழ்வு இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
இந்
நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக்
கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைத் தமிழ்
அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்
கோடீஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து
சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள்
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், பிரதேச சபைத் தவிசாளர்கள் உப
தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், அரச
அதிகாரிகள், சைவா அமைப்பு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள்
மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து
கொண்டனர்.
.jpeg)









.jpeg)

.jpeg)





