பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி
வரும், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் நிஷான் கனகராஜா
பிரித்தானிய மன்னரின் 2026-ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கௌரவப் பட்டியலில்
'நைட்' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
உயர்கல்வித் துறைக்கு
அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு மற்றும் சமூக உள்ளடக்கல் கொள்கைகளை
முன்னெடுத்தமைக்காக இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைப்
பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ். மார்ட்டின் வீதியில் வளர்ந்தவர். யாழ்.
பரி. யோவான் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1985ஆம் ஆண்டு அந்தக்
கல்லூரியின் தலைமை மாணவ தலைவராகவும் (Head Prefect) திகழ்ந்தவர்.
இலங்கையில்
தனது ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் பிரித்தானியாவின் புகழ்பெற்ற
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மற்றும் கலாநிதிப்
பட்டங்களைப் பெற்றார்.





