ஐனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின்
ஆலோசனைக்கமைய "ஒசு சவிய" மூலிகைகளை வளர்ப்போம் நாட்டை கட்டியெழுப்புவோம் தேசிய திட்டத்தின் கிழக்கு மாகாணத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று வாழைச்சேனை கடதாசி ஆலை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடதாசி ஆலையின் தவிசாளர் பொரியலாளர் உபாலி ரெட்னாயக்க தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜெயந்த லால் ரட்ணசேகர கலந்து கொண்டு மூலிகை மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டதுடன் ஏனைய அதிதிகளாக ஒசு சவிய தேசிய வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் சட்டத்தரணி சமந்த கோரளேராச்சி, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் டாக்டர் எம்.ஏ.நபீல், சமூக மருத்துவ மேற்பார்வை உத்தியோகத்தர் டாக்டர் எஸ்.சிவச்செல்வன், மட்டக்களப்பு மாவட்ட சமூக மருத்துவ உத்தியோகத்தர் திருமதி டாக்டர் திருமதி அனல்ரீள், கடதாசி ஆலையின் பிரதான இணைப்பாளர் எஸ்.அம்பிகாவதி, பிரஜாசக்தியின் பிரதேச தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒரு லட்சம் மூலிகை செடிகளை நட்டு ஒரு லட்சம் மூலிகைகளை சேகரிக்கும் நோக்கில் வாழைச்சேனை கடதாசி ஆலையில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கடதாசி ஆலையின் தவிசாளர் பொறியாளர் உபாலி ரெட்னாயக்க தெரிவித்தார்
.jpeg)
.jpeg)





.jpeg)

.jpeg)




