யாழ்ப்பாணத்தில் இரண்டு சமூக பிறழ்வான விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு ஆறு பெண்களும், இரண்டு இளைஞர்களும் கைது .

 


யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (27.12.2025) இரண்டு சமூக பிறழ்வான விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன.

இதன்போது ஆறு பெண்களும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த சமூக பிறழ்வான விடுதிகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் சுற்றிவளைத்த சந்தர்ப்பத்தில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.