இலங்கையில் உள்ள ஊழியர்
சேமலாப நிதி (EPF) உறுப்பினர்களுக்கான இணையவழிப் பதிவு நடைமுறை இன்று(29)
முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது.
தொழில் அமைச்சில் நடைபெறவுள்ள இந்த
விசேட நிகழ்வில், அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் பிரதி அமைச்சர்
மஹிந்த ஜெயசிங்க ஆகியோர் கலந்துகொண்டு இப்புதிய திட்டத்தை ஆரம்பித்து
வைக்கவுள்ளனர்.
இதன் மூலம் உறுப்பினர்கள் இனி டிஜிட்டல் முறையில் தங்களை எளிதாகப் பதிவு செய்துகொள்ளும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊழியர்களின் நலன்களை மேம்படுத்துவதே இந்த அரச முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.





