கடந்த கால அரசாங்கங்கள் அனர்த்த காலங்களில் கிடைக்கப்பெற்ற நிவாரண பொருட்களை மிகத் தாமதமாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வந்தனர் ஆனால் தற்போதுள்ள அரசாங்கம் அரச ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவையின் மூலம் துரிதமாக அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றது என
மாலத்தீவு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களின் ஒரு தொகுதி நேரடியாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏராவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களுக்காக வழங்கி வைக்கப்பட்டு இருந்தது
அவற்றை அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வகையில் அப்பகுதி கிராம சேவையாளரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று செங்கலடி பிரதேச செயலாளர் எஸ் தனபால் தலைமையில் இடம்பெற்றது
இதன்போது 10 லட்சம் ரூபா பெறுமதியான மீன் டின்கள் சமையல் உபகரணங்கள் என்பன பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட தண்ணா முனை மைலம்பா வெளி குமார வேலி ஆர் கிராமம் பகுதிகளுக்குரிய கிராம சேவர்களிடம் கையளிக்கப்பட்டது
இந்த நிகழ்வில் இப்பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆறுமுகம் சுதாகரன் மற்றும் அரச உயர் அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின் இப்பிரதேச உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வரதன்
.jpeg)



.jpeg)

.jpeg)




