துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை புதுப்பித்துக்கொள்ள முடியும்.
துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.





