மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ஒன்று கூடல் மண்டபத்தில்
அனைத்து பிரதேச வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்வு 29.12.2025 அன்று இடம்பெற்றது.பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.R.முரளிஸ்வரன், பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.மோகனகுமார் அவர்களினாலும் பிரதேச வைத்தியசாலைகளின் முகாமைத்துவமும், அவற்றினை மேம்படுத்தும் உத்திகளும், அதற்கான வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் கலந்துரையாடப்பட்டது.வைத்தியசாலைகளின் சேவைகளை எவ்வாறு சிறப்பாகவும், நோயாளிகளுக்கு பாதுகாப்புடனும் எடுத்து செல்வது, மேற்பார்வை செயற்பாடுகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி தரம் மற்றும் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி Dr.J.சகாயதர்ஷினி அவர்களினால் கலந்துரையாடப்பட்டது.அனைத்து பிரதேச வைத்தியசாலைகளின் சில மேற்பார்வை செயற்பாடுகளை விளக்கப் படக்காட்சி மூலம் கலந்துரையாடப்பட்டதுடன் மேலும் மேம்படுத்துவதற்கான உபாயங்களும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வானது தரம் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் ஒருங்கிணைத்து நடத்தியமை குறிப்பிடத்தக்கது ஆகும்.
.jpeg)


.jpeg)
.jpeg)


.jpeg)

.jpeg)





