பெரஹரா ஊர்வலத்தில் யானைகள் மதம்கொண்டு ஓடிய காட்சி தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
பூவேலிகடா பகுதியில் பெரஹரா ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பாகன்கள் தமது யானைகளை அலங்காரங்களுடன் கொண்டு சென்றனர்.
பல யானைகள் பல்வேறு வண்ண அலங்காரங்களுடன் பெரஹரா ஊர்வலத்தில் கலந்துகொண்டன.
பெரஹரா ஆரம்பமானதுடன் ஒவ்வொரு யானைகளும் தமது பாகன்களுடன் மெல்ல மெல்ல அழகாக நடந்து சென்றன.
இதில் ஒரு யானை மதங்கொண்டு மற்ற யானைகளை முந்திக்கொண்டு ஓடியது. இதனால் மற்ற யானைகளும் பதற்றத்துடன் ஓடியதால் அப்பகுதியில் நின்ற மக்கள் சிதறியடிக்க ஓடிய காட்சி பதபதைக்க வைத்துள்ளது.





