பட்டிப்ப பளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமம் ஒன்றில் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஒரு நபருக்கு பாராளுமன்ற உறுப்பினரால் தவிசாளர்ளுக்கான நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டது

 

 


 நாட்டில் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் மக்கள் பணி செய்வதாக கூறி அவர்களது கட்சி ஆதரவாளர்களுக்கு அதிகப்படியான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தொடர்ச்சியாக சந்தர்ப்பங்களை வழங்கி வந்தது

 இருப்பினும் தற்போதுள்ள அரசாங்கம் தங்களது தொடர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அழகான நாடு வளமான வாழ்க்கை என்ற கருப்பொருளுக்கு அமைவாக தற்போது நாட்டில் அபிவிருத்திகளை முன்னெடுக்கும் போது அவை சமமாக பங்கெடுக்க வேண்டும் என்பதோடு 

அவை பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உரிய முறையில் சென்றடைய வேண்டும் என்னும் ஜனாதிபதியின் உன்னத கருத்துக்கமைவாக தற்போது

 கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்து வரும் பிரஜா சக்தி வேலைத் திட்டத்தின் அமைவாக கிராமங்களில் தேவைப்படும் முக்கியமான தேவைகளை நிறைவேற்றும் முகமாக புதிய உறுப்பினர்களை உள்வாங்கும் திட்டத்தின் கீழ் அவர்களுக்கான நியமனம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களினால் சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

 இருப்பினும் சிலர் அரசியல் கால் புணர்ச்சி காரணமாக அவற்றை தங்களது சொந்த அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காக சில உண்மைக்கு புறம்பான தகவல்களை தற்போது சமூக மட்டத்தில் பரப்பி வருகின்றனர்

 இருப்பினும் படுவான் கரை பகுதியில்  பட்டிப்ப பளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமம் ஒன்றில் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஒரு நபருக்கு பாராளுமன்ற உறுப்பினரால் இதற்குரிய நியமன கடிதங்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளமை ஆனது இதற்கு ஓர் நல்ல ஒரு உதாரணம் பதிவாக இங்கு அறிய முடிகிறது
பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் சம உரிமை என்ற ரீதியில் #பிரஜாசக்தி தவிசாளர் வழங்கப்படுகிறது. (மாவடி முன்மாரி யை சேர்ந்த சோதிநாதன்  என்பவருக்கு) . சொந்த உறவுகளுக்கு மற்றும் நண்பர்களுக்கு வழங்கப்படுகிறது என்ற கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டதாக இந்த பதிவு அமைந்துள்ளது. 

 'பிரஜாசக்தி' வேலைத்திட்டத்திற்கான  குழுக்களின் தவிசாளர்ளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மண்முனை தென் மேற்கு, பட்டிப்பளை, பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிரஜாசக்தி இணைத்தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களினால்  வழங்கி வைக்கப்பட்டது.

வரதன்