மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்.

 


போரதீவுபற்று பிரதேச சபையும் பொது நூலகங்களும் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்றைய தினம் ( 30 ) நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில்  வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக  உள்ளூராட்சி உதவி ஆணையாளர் M.R.F றிப்கா கலந்து  கொண்டார்.

மேலும் இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன் , உப தவிசாளர் த.கயசீலன், செயலாளர் சி.பகிரதன்,என்போரும், பிரதேச சபை உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள்,எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.