மட்டக்களப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.












































தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் 25.12.2025 பிற்பகல் மட்டக்களப்பு மாநகர சபை நகர மண்டபத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு முன்னதாக அன்னாரின் கொலைக்கு நீதிவேண்டி மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இருந்து  மாநகர சபை நகர மண்டபம் வரையில் நினைவுப் பேரணி ஒன்றும் இடம்பெற்றது.

தொடர்ந்து அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி, நினைவுப் பேருரை என்பன நிகழ்த்தப்பட்டது.

நினைவுப் பேருரையானது கொழும்புப் பல்கலைக்கழகம்
 சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் அவர்களினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இ.சிறிநாத்,  சிறிநேசன் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், முன்னாள்  மாநகரசபை முதல்வர்  தியாகராஜா சரவணபவன்    பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணி உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 நிகழ்வின் முடிவில் பாராளுமன்ற உறுப்பினர்களாலும், கட்சி பிரமுகர்களாலும் கொழும்புப் பல்கலைக்கழக
 சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் அவர்களிகளுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் .