மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒளி விழா -2025

 

 













































உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நன்கொடையாளர்களின் நிதி அனுசரணையில் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் பார்வையற்றவர்களை ஒன்றிணைத்து ஒளி விழா நிகழ்வானது 27.12.2025 அன்று சங்கத்தின் மண்டபத்தில் தலைவர் ப. டிசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் ஆன்மீக அதிதியாக 
புனித இன்னாசியார் தேவாலய பங்குத்தந்தை 
 ஜூட் டிலக்சன் அடிகளார், 
பிரதம விருந்தினராக 
தேசிய கணக்காய்வு திணைக்கள மட்டக்களப்பு அலுவலக அத்தியட்சகர்  
ரொபட் அலோசியஸ்,
சிறப்பு விருந்தினராக நாவற்குடா சின்ன லூர்த்து மாதா தேவாலய பங்குத்தந்தை 
ஜேசுதாசன் அடிகளார்,
கௌரவ விருந்தினராக  செங்கலடி பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் 
A.  சுதாகரன் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் 70  பார்வையற்றவர்களுக்கு நத்தார் உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.