மட்டக்களப்பு சென்மேரிஸ் முன்பள்ளி சிறார்களின் வருடாந்த கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் -2025.







 






 
















 












 









 
 

 
 








 
 






 
























மட்டக்களப்பு சென்மேரிஸ்  முன்பள்ளி பாலர் பாடசாலை மற்றும்  பகல் நேர பராமரிப்பு நிலையம் , சென்மேரிஸ்  முன்பள்ளி பூம்புகார் மற்றும்  சென்மேரிஸ்  முன்பள்ளி புளியந்தீவு ஆகியன இணைந்து  பணிப்பாளர் திருமதி .ராஜினி  பிரான்சிஸ் அவர்களின் தலைமையில்  வருடாந்த கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் -2025. மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
நிகழ்வுக்கு  மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்பள்ளிப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வீ.முரளிதரன் அவர்கள்  பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் .
ஆரம்ப நிகழ்வாக பிரதான அதிதிக்கு சிறார்களால்  மாலை அணிவிக்கப்பட்டு மலர் செண்டு வழங்கப்பட்டு விழா மண்டபத்துக்கு வரவேற்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, வரவேற்பு நடனம்  பாடசாலை கீதம் மற்றும்   தேசிய கீதம் இசைக்கப்பட்டு தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளோடு  விழா ஆரம்பமாகியது .

பாடசாலைச் சிறார்களின் தமிழ் ஆங்கில சிங்கள பேச்சு, சிறார்களின் குழு நடனம் ,கவிதை,  கிறிஸ்துவின் பிறப்பு நாடகம் ,  பாடல் ,  போர்த்துக்கேய கலாச்சார நடனம்  முன்பள்ளி ஆசிரியர்களின் கரோல் கீதம்  போன்ற கலை நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக இடம் பெற்றன .  நிகழ்ச்சிகள் அரங்கத்தில் கூடி இருந்தோரை  மென்  மேலும் பரவசத்தில் ஆழ்த்தியது.
 சிறார்களை நெறிப்படுத்திய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
முன்பள்ளியில் சிறப்பாக ஆரம்பக் கல்வியைப் பெற்று கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு திறமை காட்டிய  சிறார்களுக்கு   சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.  

 
 இந்நிகழ்வில் சென்மேரிஸ் முன்பள்ளி முகாமையாளர் திருமதி கமலினி சூரிய குமாரன் ,  முன்பள்ளி ஆசிரியர்கள், பாடசாலை   சிறார்களின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள்,    பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பட்டோர் இதன்போது கலந்து கொண்டனர்.