மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் 11 பிரதீபா விருதுகளை வென்றெடுத்து தேசிய ரீதியில் வரலாற்று சாதனை.

 

 

 

 



 

 
















 புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சினால் நடாத்தப்பட்ட பிரதீபா விருது வழங்கும் விழா கடந்த 24 ஆம் திகதி கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு  மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம்  11 இடங்களைப் பெற்று தேசிய ரீதியில் சாதனை  படைத்துள்ளதுடன் இலங்கையிலே முதல் தர கலாசார மத்திய நிலையம் என்ற விருதினையும் பெற்று  மட்டு  மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளது
அதேவேளை இன்னொரு பெருமைக்குரி விடயமாக கிழக்கு மாகாண திறமையான கலாசார மத்திய நிலையம் எனும் விருதையும் தனதாக்கி கொண்டது 
 மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவர்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 11  போட்டிகளில் பங்கு பற்றி விருதுகளை வென்றெடுத்து    மட்டக்களப்பு மண்ணுக்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்துள்ளனர். 
1.சூழலை அழகுப்படுத்தும் பறவைகளின் செயற்பாடு – நடனம் 1ம் இடம்
2.கோலாட்டம்- குழு பெண்கள் 1ம் இடம்
3.தில்லானா – ஆண் தனி 1ம் இடம்
4.மேலைத்தேய இசை – வாத்தியம் குழு 1ம் இடம்
5.சடங்கு இசைப் பாடல் குழு – 1ம் இடம்
6.கடம் தனி – 1ம் இடம்
7.மிருதங்கம் தனி -1ம் இடம்
8.ஜதீஸ்வரம் தனி பெண் – 2ம் இடம்
9.தோடயமங்களம் – குழு – 2ம் இடம்
10.விளையாட்டு வீடு- குழு நடனம் – 2ம் இடம்
11.பெண் – தனி இசை- 2ம் இடம்
------------------------------------------------------------
அத்துடன்  மட்டக்களப்பு மண்முனை வடக்கு  கலாசார மத்திய நிலையமானது   தொடர்ந்து 2 வது தடவையாக அதி சூரத்தாவ விருதினையும்  தன்னகத்தே பெற்று  சாதனை படைத்து இலங்கையுள்ள 
ஏனைய கலாசார மத்திய நிலையங்களுக்கு    முன்னோடியாக திகழ்கிறது .