மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்தும் வகையில் பிரதான கடலுக்குள் வெள்ளநீர் வெளியேற்றம் செய்யும் பிரதான பகுதியான மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தாழ் நிலங்களில் உள்ள வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பகுமதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வலையறவு பிரதான பாலத்தின் ஊடாகவும் வெள்ளநீர் பாயும் நிலைமை காணப்படுகின்றது
இன்று19. 11.2025 வவுனதீவு பிரதேசத்திற்கு செல்லும் சுமைதாங்கி பாலம் பாலம் ஆகியவற்றின் ஊடாக வெள்ளநீர் பாயும் நிலைமை காணப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகளவான வயல்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.
வவுணதீவு பிரதேச சபையின் உழவு இயந்திரத்தில் பிரதேச சபை ஊழியர்கள் பொதுமக்களின் வாகனத்தை ஏற்றி சென்று உதவி செய்து வருகின்றதையும் காணக் கூடியதாக இருந்தது.
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)





